ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். பொருளாளர் தண்டபாணி, துணைத் தலைவர்கள் பக்தவச்சலம், திருமாவளவன், முருகன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.பெரம்பலுார் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஏற்பட்ட காலி பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நியமிக்க வேண்டும். பணியிட மாறுதலில் அரசியல் தலையீடுகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை அளித்த மாநில, மாவட்ட நிர்வாகிகளை, மாவட்ட கலெக்டர் கிரேஸ் அவமதித்து மனுவை குப்பை தொட்டியில் வீசியதை கண்டித்தும், கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.