மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி
15-Jul-2025
விழுப்புரம் : முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம், நகராட்சி 33வது வார்டு வழுதரெட்டி, முத்தாலம்மன் கோவில், சாகை வார்த்தல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, காலை 8:00 மணிக்கு கரகம் ஜோடித்தல், ஊர்வலம் புறப்படுதல், தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல், அம்மனுக்கு தீபாரதனையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
15-Jul-2025