உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பனி, மழையால் கடும் குளிர் ஸ்வெட்டர் விற்பனை தீவிரம்

பனி, மழையால் கடும் குளிர் ஸ்வெட்டர் விற்பனை தீவிரம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடர் மழை, பனியால் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், கம்பளி ஆடை விற்பனை பரபரப்பாக நடந்தது.விழுப்புரத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு முதல் அதிகாலை வரை பனிபொழிவு இருந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாள்களாக பரவலாக மழையும் பெய்து வருகிறது. இதனால், மாலை 6.00 மணி முதல் காலை 8.00 மணி வரை கடும் குளிர் நிலவி வருகிறது. தொடர்ந்து, மூன்று நாட்களாக மழையால் பகல் நேரங்களிலும் கடுமையான குளிர்காற்று வீசிவருவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், விழுப்புரத்தில் மழைக்கான குடைகள், மழை கோட்டுகள் விற்பனையும், அதனுடன் கம்பளி ஆடைகள் விற்பனையும் பரபரப்பாக நடந்து வருகிறது. விழுப்புரம் நேருஜி சாலை காந்தி சிலை சந்திப்பு பகுதியில், ஆண்டு தோறும் சீசனுக்கு நேபாள நாட்டினர் முகாமிட்டு, கம்பளி ஆடைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த வகையில், தற்போது அந்த இடத்தில் விற்பனை நடக்கிறது.கம்பளி ஸ்வெட்டர்கள், தலை குல்லா, கால், கைகளுக்கான கம்பளி உறைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான கம்பளி ஆடைகள் வித விதமாக விற்கப்படுகிறது. ரூ.50 முதல் ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ.600 வரை இந்த கம்பளி ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது. கடும் குளிர் காரணமாக, பொது மக்கள் கம்பளி ஆடைகளை வாங்கிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை