மேலும் செய்திகள்
நுங்கு விற்பனை 'ஜோர்'
15-Apr-2025
வானூர் : வானூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நுங்கு விற்பனை ஜோராக நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக சராசரியாக, 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் பிடியில் பொது மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் இளநீர், தர்பூசணி, மோர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். தற்போது நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடைகாலத்தில் மட்டும் நுங்கு விற்பனைக்கு வரும். மயிலம் ரோட்டில் வானுார், ரங்கநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. நான்கு நுங்கு, 20 ரூபாய் வரை விற்பனையாகிறது. இங்கு விற்பனையாகும் நுங்குகள் அனைத்தும் மயிலம், செண்டூர் உள்ளிட்ட பகுதியில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடதக்கது.
15-Apr-2025