உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஆற்று மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் நேற்று இந்திரா நகர் மேம்பாலம் அருகே ரோந்து சென்றனர். அவ்வழியாக சென்ற வேனை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.அப்போது, வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார். வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, ஆற்று மணல் கடத்தி வருவது தெரியவந்தது. வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, புதுச்சேரி மாநிலம், கூனிச்சம்பட்டை சேர்ந்த மதன்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை