உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாரதா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

சாரதா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

செஞ்சி: செஞ்சி சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை தாளாளர் பாராட்டினார்.இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிய 148 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் வெற்றியை கொடுத்துள்ளனர். மாணவி அனுஸ்ரீ 600க்கு 595 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார். தொடர்ந்த மாணவர் வினைகுகன் 593, மாணவி வர்ஷினி 590 மதிப்பெண் பெற்றுள்ளனர்.கணிதம் பாடத்தில் 67 மாணவர்கள், வேதியியலில் 91, கம்ப்யூட்டர் சயின்சில் 13, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் 3, வணிக கணிதத்தில் 3 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.மேலும், தமிழில் 7 மாணவர்களும், ஆங்கிலத்தில் 2, உயிரியலில் 15, கம்ப்யூட்டர் சயின்சில் 6 மாணவர்கள் 100க்கு99 மதிப்பெண் பெற்றுள்ளனர். 570 மதிப்பெண்ணுக்கு மேல் 72 பேர், 550க்கு மேல் 44 பேர், 500க்கு மேல் 30 பேர், 450க்கு மேல் 2 பேர் பெற்றுள்ளனர். சராசரி மதிப்பெண்ணாக 562 மதிப்பெண் எடுத்திருந்தனர்.பள்ளியில் சிறப்பிடங்களைப் பிடித்த 3 மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் கலைச்செல்வன் பாராட்டினார். பள்ளி முதல்வர் சிவசங்கரி, நிர்வாக அலுவலர் அருள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ