உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிரீன் பாரடைஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கிரீன் பாரடைஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திண்டிவனம் : மயிலம் அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி.பி.எஸ்.இ., மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பள்ளி தாளாளர் சண்முகம் துவக்கி வைத்தார். பள்ளியின் முதன்மை இயக்குனர் வனஜா சண்முகம் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நெய்வேலி என்.எல்.சி., நிலக்கரி சுரங்கத்தின் ஓய்வு பெற்ற மேலாளர் சங்கரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில வல்லுநரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான பாலகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பாராட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். பள்ளி செயலாளர் சந்தோஷ், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்புகளை கண்டுகளித்தனர். பள்ளி முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை