உள்ளூர் செய்திகள்

அறிவியல் கண்காட்சி

மரக்காணம் : திண்டிவனம் அடுத்த ஓமந்துார் ஸ்ரீராம் வேலம்மாள் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி கண்காட்சி நடந்தது.பள்ளி தாளாளர் முரளி என்கிற ரகுராமன் மேற்பார்வையில் நடந்த நிகழ்ச்சியில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் விஞ்ஞானி சுமதி தலைமை தாங்கி, மாணவர்களின் பல்துறை சார்ந்த இயங்கு நிலை, இயந்திர செயல்பாடுகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டர்.ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள 800 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் அவரவர் விருப்பத் துறையில் தங்களது ஆய்வுகள் மற்றும் அறிவியல் சோதனைகளை பார்வையாளர்களிடம் விவரித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ