உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி

வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி

விழுப்புரம்: மயிலம் அருகே ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். மயிலம் அடுத்த பந்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வமணி, 48; இவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தனது ஸ்கூட்டரில் விழுப்புரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாக னம் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தெய்வமணி சம்பவ இடத்திலேயே இறந்தார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ