உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களைத் தேடி திட்டம் கலெக்டர் திடீர் ஆய்வு

உங்களைத் தேடி திட்டம் கலெக்டர் திடீர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.இருவேல்பட்டு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பழனி, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை குறித்தும், மருந்து கையிருப்பு குறித்தும் கேட்டறிந்தார். மழைக்காலம் என்பதால் பாம்பு, பூச்சி கடி மருந்து ஆகியவற்றை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டன்தின் கீழ் பயன்பெறுவர்கள் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக திருவெண்ணெய்நல்லுார் தாலுகா அலுவலகத்தில் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து 44 கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென துறைஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.தாசில்தார் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் காய்திரி, டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை