உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் கல்லுாரியில் கருத்தரங்கம்

மயிலம் கல்லுாரியில் கருத்தரங்கம்

மயிலம் : மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லுாரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. 'வாழ்வியல் அன்றாட சைபர் பாதுகாப்பு' தலைப்பில் நடந்த கருத்தரங்கத்திற்கு, பொம்மபுர ஆதீனம் 20ஆம் பட்ட சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன், கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் பாரதிராஜா வரவேற்றார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் குமார் வாழ்த்தி பேசினார். சென்னை எப்.ஐ.ஐ.டி., பார்மாவின் தலைமை தொழில் நுட்ப அதிகாரி நடராஜன் சைபர் பாதுகாப்பு மற்றும் வாழ்வியல் அன்றாடப் பயன்பாடுக் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ