மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கருத்தரங்கம்
31-Mar-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரியில் தொழில் முனையும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முதல்வர் சங்கர் வரவேற்றார். விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி தகவல் தொழில்நுட்ப துறை துணை பேராசிரியை கவிதா, தொழில் முனையும் மாணவர்களுக்கு, எதிர்கால தன்னம்பிக்கை குறித்து பேசினார். கல்லுாரி துணை முதல்வர் டாக்டர் ஜெகன், துணை பேராசிரியர் மனோசந்தர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். பி. ஆர். ஓ., சந்துரு நன்றி கூறினார்.
31-Mar-2025