உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி சாணக்யா பள்ளி சாதனை பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி

செஞ்சி சாணக்யா பள்ளி சாதனை பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி

செஞ்சி: செஞ்சி சாணக்யா பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 86 பேரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு, நுாறு சதவீதம் வெற்றியும், மாவட்ட அளவில் சிறப்பிடமும் பிடித்துள்ளனர். மாணவி ஷபீருல் அம்ரின் மற்றும் மாணவன் கதிர்வேல் ஆகியோர் 500க்கு 492 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி காவியா 488 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவன் சுதாகர் 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். ஆங்கிலத்தில் ஒரு மாணவனும், அறிவியலில் 14 மாணவர்களும், சமூக அறிவியலில் ஒரு மாணவனும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 22 மாணவர்களும், 400க்கு மேல் 43 மாணவர்களும், 350க்கு மேல் 13 மாணவர்களும், 300க்கு மேல் 5 மாணவர்களும், 275 க்கு மேல் 3 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். பள்ளியில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் தேவராஜ், துணைத்தலைவர் வேல்முருகன் சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளி முதல்வர் சேகர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ