உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி சாணக்யா பள்ளி மாணவர்கள் சென்டம்

செஞ்சி சாணக்யா பள்ளி மாணவர்கள் சென்டம்

செஞ்சி: செஞ்சி சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 130 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று தந்துள்ளனர். மாணவி தேவிபாலா 600க்கு 590 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்த, மாணவி நித்யஸ்ரீ 587, ஹபிசா 586 மதிப்பெண் பெற்றுள்ளவர்,580க்கு மேல் 11 பேர், 550க்கு மேல் 82 பேர், 500க்கு மேல் 29 பேர், 440க்கு மேல் 9 பேர் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியலிலில் 27 பேர், கணினி பயன்பாட்டில் 4 பேர், இயற்பியலில் 17 பேர் 100க்கு100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.இதே போல் தமிழில் 2 பேர், கணிதத்தில் 23, வேதியியலில் 58,பொருளியலில் 2, வணிகவியலில் 3, உயிரியலில் 2 பேர் 99 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 6 மாணவர்கள் 98 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.சிறப்பிடங்களைப் பிடித்த மாணவிகளை தாளாளர் தேவராஜ், துணைத்தலைவர் வேல்முருகன் ஆகியோர் பாராட்டினர். பள்ளி முதல்வர் சேகர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை