உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மவுன சாது பால ஞானசுவாமிகள் குருபூஜை விழா

 மவுன சாது பால ஞானசுவாமிகள் குருபூஜை விழா

மயிலம் டிச. 28-: சின்னநெற்குணம் கிராமத்தில் காந்திமதி உடனுறை நெல்லையப்ப சுவாமி கோவிலில் மார்கழி மாத உற்சவம், மற்றும் மவுன சாது பால ஞான சுவாமிகளின் மகா குருபூஜை விழா நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு நெல்லையப்பர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள சித்தர் மவுன சாது பால ஞான சுவாமி பீடத்தில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடந்த ஆன்மிக சொற்பொழிவிற்கு நெல்லையப்ப சுவாமிகள் அறக்கட்டளை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சத்திய சொரூபன் வரவேற்றார். கோவை சிவனடியார் பதஞ்சலீஸ்வரன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பிற்பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ