மேலும் செய்திகள்
அ.தி.மு.க., காணொலி கலந்துரையாடல்
11-Mar-2025
செஞ்சி: செஞ்சியில் தர்ம ரக்ஷனா சமிதி சார்பில் இல்லற தர்மம் வெள்ளி விழா மாநாடு நடந்தது.மாநாட்டில், வேத பண்டிதர்கள் நித்ய பூஜை, பித்ரு பூஜை, இறைவழிபாடு, தினசரி வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய தர்மம், குல தெய்வ வழிபாடு, தானம் செய்வதன் பயன், திருக்கோவில் வழிபாடு குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவும், தியானமும் நடந்தது. திரளான பொது மக்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை புதுச்சேரி மண்டல செயலாளர் ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் மோகன், மண்டல அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் குமார், பொதுச் செயலாளர் கவுசிகன், செயலாளர்கள் சேகர், முனுசாமி, முருகைய்யன், தெய்வசிகாமணி செய்திருந்தனர்.
11-Mar-2025