விழுப்புரம்: விழுப்புரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். விழுப்புரம் தி.மு.க., மத்திய மாவட்டத்திற்குட்பட்ட, விழுப்புரம், வானுார் சட்டசபை தொகுதிகளில், மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஓட்டுச்சாவடிகள் வாரியாக சென்று, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை ஆய்வு செய்து வருகிறார். விழுப்புரம் நகரில் நேற்று காலை, சந்தானகோபாலபுரம், வி.மருதுார், எம்.ஆர்.கே., வீதி, தர்மராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான படிவம் வாக்காளர்களுக்கு வழங்கும் பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அந்தந்த வார்டுகளில், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு கூட்டம் நடத்தி, ஆலோசனைகள் வழங்கினார். அப்போது, ஒரு வாக்காளர் கூட விடுபடாமல் சேர்ப்பதற்கான பணிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர துணைச் செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கபாலி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன். தகவல் தொழில் நுட்ப அணி ஆனந்த், மாவட்ட சிறுபான்மை அணி தாகீர், வார்டு செயலாளர்கள் பிரபாகரன், சுரேஷ்பாபு, விஜயகுமார், செந்தில்குமார், வழக்கறிஞரணி ராஜா, மீனவரணி கார்த்திக், தொழிலாளரணி லட்சுமிபதி, ராம் உள்ளிட்ட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.