விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், ஆற்காடு ஊராட்சியில் எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணிகளை, மாவட்ட பொறுப்பாளர் ஆய்வு செய்தார். விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் முகையூர் தெற்கு ஒன்றியம், ஆற்காடு ஊராட்சியில் உள்ள 134, 135, 136, 137, 138 ஓட்டுச் சாவடிகளில் கடந்த 4ம் தேதி முதல் நடக்கும் எஸ்.ஐ.ஆர்., (சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள்) விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் பணிகளை, மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி ஆய்வு செய்தார். மாவட்ட துணை செயலாளர் கற்பகம், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், லுாயிஸ், மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி, ஒன்றிய நிர்வாகிகள் முருகையன், ஏழுமலை, சிவா, சத்தியராஜ், சாந்தகுமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஞானவேல். மாணவரணி துணை அமைப்பாளர் அறிவழகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புஷ்பராஜ், மாணவரணி அமைப்பாளர் பிரான்சிஸ் சேவியர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மேகநாதன், பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன் உட்பட பலர் உடனிருந்தனர்.