உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கால்நடை துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

கால்நடை துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் கால்நடை பெருக்கம் மற்றும் தீவினம் அபிவிருத்தி துணை இயக்குநர் அலுவலகத்தில், விவசாயிகளை தொழில் முனைவோராக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் துவக்க விழா நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, திட்டத்தை துவக்கி வைத்து கூறியதாவது; இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி விழுப்புரம் மாவட்டத்திற்கு 180 விவசாயிகள் என குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், முதல் அணியாக 30 நபர்களுக்கு 20 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், விவசாயிகளுக்கு ஆடு, மாடு வளர்த்தல், கோழிப்பண்ணை, வெண் பன்றி வளர்ப்பு மற்றும் தீவனப்புல் உற்பத்தி தொடர்பான பயிற்சிகள் கால்நடை உதவி டாக்டர்கள், உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மண்டல இணை இயக்குநர், கால்நடை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களால் வழங்கப்படுகிறது என கூறினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் (பொறுப்பு) ரவிராஜா, உதவி இயக்குநர்கள் ஜெய்சிராணி, முருகவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ