மேலும் செய்திகள்
கார் மோதி கணவர் பலி மனைவி படுகாயம்
03-May-2025
விழுப்புரம்: விழுப்புரம் சமூக ஆர்வலர் அய்யப்பன் ஆயிரம் பனை விதை நடவு செய்து சாதனை படைத்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யப்பன், 60; பொறியியல் பட்டதாரியான இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, உணவு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தார். அரசுத் துறைகளுடன் இணைந்து ஆதரவற்றோர், முதியோர்களுக்கு சேவை, பெண்கள் பாதுகாப்பிற்கான காவலன் செயலி உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டு வருகிறார்.இளைஞர்களை ஒருங்கிணைத்து, காணை ஒன்றிய பகுதிகளில் மரக் கன்றுகள் நடும் விழா, போட்டித் தேர்வுக்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்தல், ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தை துாய்மை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.விழுப்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றியபடியே, பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் மாவட்ட அமைப்பாளராக உள்ள இவரது சமூகப் பணிகளை பாராட்டி, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், விழுப்புரம் தொகுதி எம்.பி., - எம்.எல்.ஏ., - கலெக்டர், எஸ்.பி., மாவட்ட வனத்துறை, நேருயுவ கேந்திரா மற்றும் பி.டி.ஓ., அலுவலகம் மூலம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.காணை வட்டார பகுதியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்வதற்கு இலக்காக கொண்டு, இதுவரை 60 ஆயிரம் விதைகளை நடவு செய்து சாதனை படைத்துள்ளார். அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஊக்கம் அளித்து வருவதால், தொடர்ந்து சேவைப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சமூக ஆர்வலர் அய்யப்பன் தெரிவித்தார்.
03-May-2025