அரசு பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட போலீஸ் சார்பில் அரசு பள்ளிகளில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட போலீஸ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானுார் வட்டார அரசு பள்ளிகளில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.வாக்கூர் பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமை தாங்கினார். சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தவமணி, கான்ஸ்டபிள் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு, இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது தொடர்பாக விரிவாக எடுத்துரைத்துனர்.