மேலும் செய்திகள்
பவ்டா கல்லுாரியில் பயிலரங்கம்
05-Mar-2025
மயிலம் : மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலக சமூகப்பணி தின விழா நடந்தது.விழாவிற்கு, முதல்வர் சுதா கிறிஸ்டிஜாய் தலைமை தாங்கி பேசினார். ராணிப்பேட்டை பாசம் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனர் புருஷோத்தமன் போதைப்பொருள் மற்றும் போதை பழக்கத்திலிருந்து மீள்வதற்கான விழிப்புணர்வு குறித்து பேசினார்.சமூக பணித்துறையில் பல்கலைக்கழக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஆனந்திக்கு சமூகப் பணித்துறைச் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.பவ்டா கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த், கல்லுாரி துணை முதல்வர் சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பாசம் பவுண்டேஷன் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சமூகப் பணித்துறை பேராசிரியர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவி செல்வி தொகுத்து வழங்கினார். விமல் ராஜ் நன்றி கூறினார்.
05-Mar-2025