உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண்வள அட்டை விழிப்புணர்வு முகாம்

மண்வள அட்டை விழிப்புணர்வு முகாம்

வானுார்: மாத்துார் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் மண் மாதிரி சேகரித்தல் மற்றும் மண்வள அட்டை விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. வானுார் வேளாண் உதவி இயக்குநர் எத்திராஜ் வரவேற்று, கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். விழுப்புரம் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் முருகன் மண் பரிசோதனை மற்றும் மண் வள பாதுகாப்பு அட்டை விழிப்புணர்வு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மாத்துார் ஊராட்சி தலைவர் ஹேமமாலினி சுந்தரம் முன்னிலை வகித்தார். விழாவில் உயிர் உரங்கள் 44 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இறுதியாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண் மாதிரிகள் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனத்தில் ஆய்வு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மண் மாதிரி முடிவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சியில் பஞ்சாயத்து செயலாளர் விஜய மைதிலி, உதவி வேளாண்மை அலுவலர் ரமாதேவி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, ஆத்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !