தாய் இறந்ததால் மகன் தற்கொலை
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் புருஷோத்தமன், 22; இவரது தாய் செல்வநாயகி, 57; கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நலம் குன்றி இறந்தார்.இதனால், மன உளைச்சலில் இருந்த புருஷோத்தமன் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.