உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி எஸ்.பி., பாராட்டு

போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி எஸ்.பி., பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு நற்சான்றிதழை எஸ்.பி., வழங்கி பாராட்டினார்.விழுப்புரம் மாவட்டத்தில், இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, நெடுஞ்சாலை ரோந்து பணியின்போது, பதிவுவெண் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்தது, போன்றவற்றில் சிறப்பாக பணி செய்த போலீசாருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி., சரவணன், போலீசாரை பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்.குறிப்பாக, கடந்த 20ம் தேதி, செஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாம்பட்டு கிராமத்தில், வயதான தம்பதியினரை உறவினரே கொலை செய்த வழக்கில், துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய உதவிய அவலுார்பேட்டை முதல் நிலைக் காவலர் ஏழுமலை.செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தில் கடந்த 28ம் தேதி நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன்.நெடுஞ்சாலை ரோந்து பிரிவு-2ல் பணிபுரியும் ஏட்டு முருகவேல், முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் 30ம் தேதி சித்தணி அருகே வாகன சோதனையில் பதிவெண் இல்லாத லாரியை பறிமுதல் செய்ததற்காகவும் பாராட்டப்பட்டு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ