போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஆய்வு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, எஸ்.பி., அறிவுறுத்தினார். விழுப்புரம் எஸ்.பி.,சரவணன், நேற்று மாலை விக்கிரவாண்டி போலீஸ் நிலையம் வந்து, வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் போலீஸ் நிலையத்தில் கைதிகள் அறை, துப்பாக்கி, குண்டுகள், தினக்குறிப்பு பதிவேடு, பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முடித்து வைக்கப்பட்டுள்ள வழக்குகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சத்தியசீலனிடம் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்வில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.