உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அன்னியூர் அரசு கல்லுாரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு

அன்னியூர் அரசு கல்லுாரியில் இன்று சிறப்பு கலந்தாய்வு

விழுப்புரம் : அன்னியூர் அரசு கல்லுாரியில் இன்று (23ம் தேதி) முதல் 25ம் தேதி வரை 4ம் கட்ட சிறப்பு பொது கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு;அன்னியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இன்று (23ம் தேதி) முதல் 25ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், 4ம் கட்ட சிறப்பு பொது கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் கல்லுாரியில் விண்ணப்பித்த அனைத்து பிரிவை சார்ந்த மாணவ, மாணவியர் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களோடு கலந்து கொள்ளலாம்.மேலும், மே 27ம் தேதிக்கு பின்னர் விண்ணப்பித்த மாணவர்களும் அதே நாளில் நடக்கும் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் காலி இடங்களுக்கு மட்டுமே கலந்தாய்வு நடக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை