மேலும் செய்திகள்
மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
16-Oct-2025
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் மாணவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. மேலாண்மைக் கல்லுாரி, முதுகலை வணிகவியல் துறை சார்பில் கல்லுாரி அரங்கில் நடந்த கருத்தரங்கினை தலைமை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பாலாஜி வரவேற்றார். சவுதி அரேபியா சப்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தின் செயல் மேலாளர் சையது ஷா ஆலம், பணியில் செயல் திறனை மேம்படுத்தும் பண்புகள் குறித்து பேசினார். கருத்தரங்கில் மேலாண்மைக் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவி கனக ஹரிணி நன்றி கூறினார்.
16-Oct-2025