மேலும் செய்திகள்
மாவட்டத்தில் 16 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்
17-Sep-2025
அவலுார்பேட்டை; வளத்தி அருகே கார் டயர் வெடித்ததில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். செஞ்சியை அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன், 52; இவர் மேல்மலையனுார் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிசெய்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, 10:20 மணிக்கு பணி முடிந்து அவரது எட்டியோஸ் காரை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வளத்தி-செஞ்சி மெயின் ரோடில் நீலாம்பூண்டிக்கு அருகே சென்று கொண் டிருந்த போது காரின் இடது பக்க டயர் வெடித்து நிலை தடுமாறி, அங்கிருந்த கிணற்று ஓரம் தலையில் படுகாயங்களுடன் குமரேசன் விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த அவரது மகன் கவுதம், 20, புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Sep-2025