உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி: விழுப்புரத்தில் 86 சதவீத படிவம் வழங்கல்

 வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி: விழுப்புரத்தில் 86 சதவீத படிவம் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 14 லட்சத்து 90 ஆயிரத்து 245 வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திரு த்த பணிகள், கடந்த 4ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 970 ஓட்டுச்சாவடிகளுக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று வரை செஞ்சி சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 444 படிவங்கள், மயிலத்தில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 626, திண்டிவனத்தில் 1 லட் சத்து 93 ஆயிரத்து 724, வானுாரில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 190, விழுப்புரத்தில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 662, விக்கிரவாண்டியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 67, திருக்கோவிலுார் தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 920 படிவம் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 பேரில், 14 லட்சத்து 90 ஆயிரத்து 24 5 பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த வாக்காளர்களில் 86.27 சதவீதம் பேருக்கு படிவங்கள் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. 2 லட்சத்து 37 ஆயிரத்து 245 பேருக்கு மட்டுமே படிவம் வழங்க வேண்டியுள்ளது. மயிலம் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 94.11 சதவீத வாக்காளர்களுக்கு படிவம் வழங்கும் பணி முடிவுற்றுள்ளது. செஞ்சி, விக்கிரவாண்டியில், 90 சதவீதம், வானுாரில் 87 சதவீதம், திருக்கோ விலுாரில் 86 சதவீதம், திண்டிவனத்தில் 82 சதவிதம், விழுப்புரம் தொகுதியில் 77 சதவீதம் வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி