விளையாட்டு விழா
திண்டிவனம் : திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் ஜான் போஸ்கோ தலைமை தாங்கினார். கவுன்சிலர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். அர்ஜூனன் எம்.எல்.ஏ., திண்டிவனம் மறை வட்டாரத்தின் குரு மைக்கேல்ஜான் ஆகியோர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். விழாவில், கணிணி ஆசிரியர் சிவக்குமார் ஒலிம்பிக் கொடியையும், பட்டதாரி ஆசிரியர் ரெமி லிஸ் இமானுவேல் பள்ளிக் கொடியையும் ஏற்றி வைத்தனர். விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி இயக்குநர் ஜான்ெஹன்றி, ஆசிரியர்கள் மரிய மோட்சானந்தம், ஜெயராஜ் செய்திருந்தனர்.