மேலும் செய்திகள்
கோலியனுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
24-Jul-2025
விழுப்புரம்:விழுப்புரத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. ரோடு 20, 21, 22 ஆகிய வார்டுகளுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. ஆஞ்சநேயா மண்டபத்தில் நடந்த முகாமை தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் விசாரித்து, குறைகள் குறித்த மனுக்களை பதிந்து, பயன்பெறும்படி அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, ஆணையர் வசந்தி, தி.மு.க., நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், நகர்மன்ற கவுன்சிலர்கள் மணவாளன், ரியாஸ் அகமது, மணி, வார்டு செயலாளர்கள் விஜயகுமார், சுரேஷ்பாபு, நகர இளைஞரணி பிரபுதேவா, மாவட்ட மாணவரணி சூரியா, அமைப்பு சாரா ஓட்டுநரணி சலீம், நகர தகவல் தொழில்நுட்ப அணி அபுபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு துறை அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
24-Jul-2025