உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

செஞ்சி : செஞ்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.செஞ்சி பேரூராட்சி சார்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட வேளாண் துணை இயக்குநர் குமாரி ஆனந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், மேல்மலையனுார் கண்மணி, வல்லம் அமுதா, செஞ்சி யோகேஸ்வரி, செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தனர். செஞ்சி தாசில்தார் துரைசெல்வன் வரவேற்றார்.மஸ்தான் எம்.எல்.ஏ., திட்டத்தை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், மணிமாறன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பேரூராட்சி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், டி.எஸ்.பி., பிரபாகரன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் குமார்.செயற்பொறியாளர் சிவசங்கரன், தோட்டக்கலை உதவி இயக்குநர் சுகந்தி, பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அரசுதுறை அதிகாரிகள் பங்கேற்றனர். பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி நன்றி கூறினார்.

கண்டாச்சிபுரம்

முகையூர் ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சியில் பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்து மனுக்களை பெற்றார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் வரவேற்றார். துணை கலெக்டர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, முகையூர் சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து,முகையூர் பி.டி.ஓ.,க்கள் பாலச்சந்தர், ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் ராஜராஜேஸ்வரி, ஊராட்சித் தலைவர் ராஜகுமாரி மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை