மேலும் செய்திகள்
விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
31-Jul-2025
விழுப்புரம் : உங்களுடன் ஸ்டாலின் முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். விழுப்புரம் தொகுதி மகாராஜபுரம், கோலியனுார் ஆகிய இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. முகாமிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பின், பொதுமக்கள் மனுக்களை பதிவு செய்யும் இடங்களை ஆய்வு செய்தார். அப்போது, நகராட்சி கமிஷனர் வசந்தி, முன்னாள் நகர்மன்ற சேர்மன் ஜனகராஜ், நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்விபிரபு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தன், பி.டி.ஓ., கார்த்திகேயன், தி.மு.க., நகர பொறுப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, நகரமன்ற கவுன்சிலர் சத்தியவதி வீரநாதன், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி கேசவன், ஒன்றிய அவைத்தலைவர் கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
31-Jul-2025