உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த கடலி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கி, பேசினார். நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க் கள், ஜெய்சங்கர், சீதாலட்சுமி, துறை சார்ந்த அதிகாரிகள், கடலி, சாத்தனந்தல், அண்ணமங்கலம் கிராம மக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.