உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திண்டிவனம்: செம்பாக்கத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த செம்பாக்கத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், நேற்று காலை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. இதில் ஆத்திப்பாக்கம், செம்பாக்கம், மாம்பாக்கம், மேல்சிவிரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒலக்கூர் பி.டி.ஓ., சரவணக்குமார் வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சங்கரலிங்கம் திட்ட விளக்க உரையாற்றினார். ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணை சேர்மன் ராஜாராம் முன்னிலை வகித்தனர். முகாமில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட கவுன்சிலர் மனோசித்ரா,ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒலக்கூர் பி.டி.ஓ., தேவதாஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை