உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் கடந்த, 15ம் தேதி துவங்கியது. விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட மாம்பழப்பட்டு சாலை, தனியார் மையத்தில் நேற்று, 26 மற்றும் 33 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கான முகாம் நடைபெற்றது. இதில், மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. உரிமை தொகை கோரும் மகளிர் விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களோடு பதிவு செய்தனர். இந்த முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். உரிமை தொகை கோரிய மகளிருக்கு விண்ணப்பம் பதிவு செய்ததற்கான ஆவணத்தை, லட்சுமணன் எம்.எல்.ஏ., வழங்கினார். தொடர்ந்து, நகர்மன்ற சேர்மன் தமிழ்செல்வி பிரபு, முகாமை ஆய்வு செய்தார். இதில், நகராட்சி ஆணையர் வசந்தி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை