கோலியனுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
விழுப்புரம்: கோலியனுார் ஒன்றியத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை லட்சுமணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 15ம் தேதி முதல், நகரம், ஒன்றியங்கள் வாரியாக 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி, கோலியனுார் ஒன்றியத்தில் நேற்று இத்திட்ட முகாம் நடந்தது. அலங்கார் மண்டபத்தில் நடந்த முகாமை தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, பார்வையிட்டார். வருவாய்த்துறை, மின்துறை உள்ளிட்ட முக்கிய 15 அரசு துறைகளின் அரங்குகள் அமைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் பெறவும் தனி அரங்கு அமைத்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் மஞ்சுளா, தனி தாசில்தார்கள் ஆனந்தன், ஆதிசக்திசிவகுமரிமன்னன், கோலியனுார் பி.டி.ஓ.,க்கள் தேவதாஸ், கார்த்திகேயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, ராஜா, மாவட்ட விவசாய அணி கேசவன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஜெயபால், ஸ்ரீதர், பொருளாளர் சவுந்தரராஜன், மாவட்ட பிரதிநிதிகள் குணசேகரன், மணி, கிளை செயலாளர்கள் அய்யனார், சிவகுரு, மோகன், சம்பத், மகாதேவன், அரிகிருஷ்ணன், குமார், ஜெயமூர்த்தி, வெங்கடேசன், ஜெயக்குமார், புகழ், சிவராமன், அருமைகண்ணு, கலியமூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.