உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திண்டிவனம்: ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நொளம்பூரில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை, ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய துணை சேர்மன் ராஜாராம் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,சரவணக்குமார் வரவேற்றார். திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் திட்ட விளக்க உரையாற்றினார். முகாமில் மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி, ஒன்றிய கவுன்சிலர்கள் எழிலரசன் , பத்மாவதி, பூங்கொடி, பஞ்சாயத்து தலைவர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 900 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், 403 மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி