மேலும் செய்திகள்
எஸ்.டி.ஏ.டி., கோடைகால பயிற்சி முகாம் நிறைவு
17-May-2025
விழுப்புரம்; மதுரையில் நடந்த மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதித்த விழுப்புரம் மாணவரை, முன்னாள் அமைச்சர் பொன்முடி பாராட்டினார்.தமிழ்நாடு இறகு பந்து கழகம் சார்பில், மாநில அளவிலான இறகு பந்து போட்டி கடந்த வாரம் மதுரையில் நடந்தது. 13 மற்றும் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்காக நடந்த போட்டியில், சென்னை, கோவை, திருச்சி, விழுப்புரம், கடலுார், சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.போட்டியில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, சதா பேட்மிட்டன் அகாடமி மையத்தில் பயிற்சி பெற்று வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் கோவிந்தகிருஷ்ணன், 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாடி, மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று, வெள்ளிப் பதக்கம் வென்றார்.இம்மாணவரை முன்னாள் அமைச்சர் பொன்முடி, நேரில் அழைத்து கவுரவித்து பாராட்டினார். நிர்வாக பணியாளர் சங்க பொதுச்செயலாளர் மணி, விழுப்புரம் மாவட்ட இறகு பந்து கழக செயலாளர் பாபு உடனிருந்தனர்.
17-May-2025