மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் மாணவர்கள் துாய்மை பணி
29-Sep-2024
மாநில பூப்பந்து போட்டி மாணவிகள் சாதனை
11-Oct-2024
விக்கிரவாண்டி : தமிழ்நாடு முதல்வர் கோப்பை மாநில அளவிலான கபடி போட்டியில் எடப்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர் .சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், விழுப்புரம் மாவட்டம் சார்பில் எடப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பொதுப்பிரிவு கபடி போட்டியில் பங்கேற்று முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்றனர். முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய், இரண்டாமிடம் பெற்ற மாணவிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. மாணவிகளை தலைமை ஆசிரியை லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஹரிதாஸ், கோகுலராஜன், கிராம மக்கள் பாராட்டினர்.
29-Sep-2024
11-Oct-2024