உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவரிடம் பணம் திருட்டு

முதியவரிடம் பணம் திருட்டு

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் தாலுகா, கண்ணாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம், 63; இவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறி விழுப்புரம் மாதா கோவில் பஸ் நிறுத்தம் அருகே இறங்கினார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.85 ஆயிரத்தை காணவில்லை. பல இடங்களில் தேடியும் பணம் கிடைக்கவில்லை.ஷேர் ஆட்டோவில் ஏறும்போது மர்ம நபர், அவர் வைத்திருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது.விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ