உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

திண்டிவனம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் நாளை சிறப்பு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதாக, முதல்வர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லுாரியில் நாளை காலை 10:00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. இதில்,மாற்று ஒதுக்கீடு செய்து, மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். இதுவரை சேர்க்கை கிடைக்காதவர்கள் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் பெற்றோருடன் உரிய அசல் சான்றிதழ்கள், கட்டணத்துடன் கலந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை