தந்தை கண்டிப்பு மாணவி தற்கொலை
விக்கிரவாண்டி : தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டிவனம் அடுத்த பெரியதச்சூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் லாவண்யா, 16; பெரியதச்சூர் அரசு பள்ளியில் பிளஸ் ௧ படித்து வந்த இவர், சில தினங்களாக படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அதனை அவரது தந்தை முருகன் நேற்று முன்தினம் இரவு கண்டித்தார். அதில், மனமுடைந்த லாவண்யா இரவு 9:30 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அதே ஊரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி இருக்கலாம் என தேடவில்லை.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள வேடிச்சாமி என்பவரின் நிலத்தில் உள்ள கிணற்றில், லாவண்யாவின் செருப்பு மிதந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, கிணற்றில் இருந்து லாவண்யா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.