மேலும் செய்திகள்
டூவீலர்கள் மோதலில் 2 வாலிபர்கள் பலி
17-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த தாதாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தமிழரசன், 20; விழுப்புரம் அரசு கலை கல்லூரியில் பி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் செல்வம், 21; என்பவருடன் பைக்கில் புறப்பட்டார். தாதாம்பாளையம் சிவன் கோவில் அருகே சென்றபோது, பைக் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதியது. இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடத்தில் தமிழரசன் உயிரிழந்தார். செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார். வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
17-Mar-2025