உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தினமலர் நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி விழுப்புரத்தில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

தினமலர் நடத்திய இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி விழுப்புரத்தில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

விழுப்புரம் : விழுப்புரத்தில் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் குவிந்தனர்.அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு, அரசு உதவிபெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள், ஆன்லைன் கவுன்சில் வாயிலாக நிரப்பப்படுகிறது.இதை டி.என்.இ.ஏ., எனும் இணையதளத்தின் வாயிலாக தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. இதில், பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான வழி முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று விழுப்புரம் பாலாஜி மகாலில் நடந்தது.நிகழ்ச்சியை, தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை பிரிவு செயலாளர் புருஷோத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி - 2025 நிகழ்ச்சியில், கவுன்சிலிங் முறையில் இந்தாண்டு செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் சேர்க்கை பிரிவு செயலாளர் புருதோஷத்தமன் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, திறன் வளர்ப்பு குறித்து சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம் விளக்கினார். எந்த 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு எந்த கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன; 'கோர்' இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும். சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கினார்.நிகழ்ச்சியில், இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்த ஏராளமான மாணவர்கள், மாணவியர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். ஆன்லைன் கவுன்சிலிங் விதிமுறைகள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், 'கட் -ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்யும் முறை, வேலைவாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் ஆகியவை குறித்த சந்தேகங்களுக்கு, இந்த நிகழ்ச்சி மூலம் விடை கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் மாணவர்கள், பெற்றோர்கள் சென்றனர்.நிகழ்ச்சியில், பங்கேற்ற பெற்றோர்களும், தங்களின் பிள்ளைகளுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் உள்ள சந்தேகங்களை எங்கு கேட்டு தெளிவு பெறுவது என யோசித்த நிலையில் 'தினமலர்' நாளிதழ் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி பெரிதும் உறுதுணையாக இருந்ததாக பெருமிதத்தோடு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ