மேலும் செய்திகள்
தேசியபூப்பந்து விளையாட்டு பள்ளி மாணவிகள் அசத்தல்
14-Oct-2026
விக்கிரவாண்டி: முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் முதலிடம் வென்று, மாநில விளையாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர். விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவிலானபெண்களுக்கான பூப்பந்து போட்டி, 14,17,19 வயதிற்கு உட்பட்ட 3 பிரிவுகளில், முட்டத்துார் ஒய்காப் பள்ளி வளாகத்தில் நடந்தது . 8 குறு மையங்களில் வெற்றி பெற்ற மாணவிகள் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளிலும் முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இவர்கள் அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான பாரதியார் தின விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகளை பள்ளி தாளாளர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் , தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, உதவி தலைமை ஆசிரியர்கள் ஜேக்கப் ஜீவானந்தம் ,ஜெப செல்வி, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், ஆசிரியர்கள் பிரேம் ராஜ்குமார், விமல் ஆகியோர் பாராட்டினர்.
14-Oct-2026