உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

அரசு கல்லுாரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

வானூர் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டம் துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒன்றிய சேர்மன் உஷா முரளி பேசினார். இந்த பயிற்சி வகுப்பு வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. இதில் மாணவர்களுடன் கலந்துரையாடல் திறன் மேம்பாட்டு திட்டங்கள், மனித உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு, மாணவர் நல்வாழ்வு, சுகாதாரம், மாணவர்களுக்கு ஆதரவு அமைப்புக்கள், பாலியல் துன்புறுத்தல், போதை பொருட்கள் எதிர்ப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. கணிதத்துறை தலைவர் எழிலரசி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி