உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டலில் திடீர் தீ விபத்து

ஓட்டலில் திடீர் தீ விபத்து

விழுப்புரம்: விழுப்புரத்தில் அசைவ ஓட்டலில் மின் கசிகாரணமாக தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் அசைவ ஓட்டலில், நேற்று இரவு 8.00 மணிக்கு மின் கசிவினால் திடீரென தீப்பிடித்தது. அச்சமடைந்த ஊழியர்கள் மெயின் சுவிட்சை நிறுத்திவிட்டு வெளியே வந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர் வந்து பார்வையிட்டனர். அப்போது, ஓட்டலின் முகப்பு பகுதியில் இருந்த மின் சுவிட்சில், மின் கசிவு காரணமாக லேசாக தீப்பிடித்து எரிந்து புகை வந்துள்ளதும், பிறகு அணைந்துள்ளதும் தெரியவந்தது. இதனால், தீயணைப்பு துறையினர் புறப்பட்டனர். இதனையடுத்து, ஊழியர்கள் மின்சார கசிவு ஏற்பட்ட பகுதியை சீரமைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ