உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மத்திய அரசு ஆணைய தலைவரிடம் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மனு

மத்திய அரசு ஆணைய தலைவரிடம் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மனு

விழுப்புரம்,: கரும்பு கொள்முதல் விலையை உயர்த்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் ராஜ்குமார், பொதுச்செயலாளர் பாண்டியன் ஆகியோர், சென்னையில் மத்திய அரசின் விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணைய தலைவர் விஜய் பவுல் ஷர்மாவை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:விவசாய தொழிலை மேம்படுத்த கிராமப் பொருளாதாரத்தை உயர்த்திட, மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்திய அரசு புதுவிதமான திட்டங்களை உருவாக்கி கரும்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.கரும்பு பயிர் இன்சூரன்ஸ் முறையை மாற்றி அமைக்க வேண்டும். விவசாய உபயோக பொருட்களான டிராக்டர், வேளாண் கருவிகள், விதைகள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை